செவ்வாய், 11 ஜனவரி, 2011

வலைபதிவு உருவாக்குவது எப்படி?



வருகைக்கு நன்றி!
 இக்காலத்தில் வீட்டில் இனைய இணைப்பு வைத்திருப்போரில் பெரும்பாலோனோர் வலைப்பதிவு எழுத தொடங்கி வாசகர்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டனர். வலைப்பதிவிட ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது; சிலர் சமூகத்திர்க்க்காகவும் (social service), சிலர் பொழுது போக்கிர்க்க்காகவும், சிலர் பணம் சம்பாரிக்கவும், சிலர் அரசியல் பற்றியும், எழுதுகிறார்கள். இவர்களைப்போல இனைய உலகில் தாமும் தடம் பதித்து உலா வரவேண்டும் என்று  நினைக்கும் புதியவர்களுக்காக   இநத பதிவை எழுதுகிறேன்.

கூகுளின் வலைப்பதிவை துவங்க பயன்படுத்தத்தக்க ஒரு மின்னஞ்சல் முகவரி (ஜி மெயிலாக  இருத்தல் நல்லது) இருந்தால் போதுமானது.
 கூகுளின் ப்ளாகரில் கணக்கை துவங்குவதற்கு முதலில் www.blogger.com செல்லவும். தோன்றும் பக்கத்தில் "Create your blog now" என அம்பு குறியிடப்பட்டிருக்கும் பகுதியை க்ளிக் செய்யவும். தோன்றும் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், உங்கள் பெயர் கொடுக்கவும். அடுத்து, கீழே வண்ணப்பெட்டிக்குள் உள்ள எழுத்துக்களை (word verification) கீழுள்ள பெட்டிக்குள் தட்டச்சு செய்யவும். அடுத்து 'i accept the termsof service' என்பதற்கு முன்பிருக்கும் பெட்டியை தேர்வு  செய்யவும். கடைசியாக continue என குறிக்கப்பட்டிருக்கும் அம்புக்குரியை சொடுக்கவும்.

அடுத்து பதிவின் தலைப்பு (TITLE) மற்றும் பதிவின் முகவரி (URL) கொடுக்கும் பகுதி தோன்றும்.  
Blog title என்னும் இடத்தில் தலைப்பையும், Blog address என்னும் இடத்தில் உங்கள் பதிவின் முகவரியையும் கொடுக்கவும். மேலும் word verification என்னும் இடத்தில் உள்ள எழுத்தை கீழே இருக்கும் கட்டத்தில் தட்டச்சு செய்யவும். பிறகு continue சொடுக்கவும்.

அடுத்ததாக உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு (template) தேர்வு செய்யும் பகுதி தோன்றும்.

உங்களுக்கு பிடித்த வார்ப்புருவை தேர்ந்தெடுத்து Start blogging  என்பதை சொடுக்கவும். அடுத்தது கீழ் உள்ளதை போன்ற பக்கம் வரும்.

இதிலிருக்கும் வார்ப்புரு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாள் பிறகு நீங்கள் விரும்பிய வார்ப்புருவை தரவிறக்கி மாற்றிக்கொள்ள முடியும்.

அடுத்து தோன்றும் பகுதி உங்கள் இடுகைகளை எழுதும் பகுதி.
இநத பகுதியில் உங்கள் இடுகையின் தலைப்பு மற்றும் விவரிப்பு கருத்துகளை தட்டச்சு செய்யவும். மேலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய மேலே உள்ள "" என்ற எழுத்தை சொடுக்கவும். பிறகு நீங்கள் தட்டச்சு செய்தால் தமிழில் எழுத்துக்கள் மாறிக்கொள்ளும். பிறகு கீழே உள்ள இடுகையை வெளியிடு (PUPLISH POST) என்பதை சொடுக்கினால் உங்கள் வலைபதிவு முழுமை அடைந்துவிடும்.
  பதிவு பிடித்திருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக